தமிழ் உறுதுணை யின் அர்த்தம்

உறுதுணை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு) இன்றியமையாத பெரும் உதவி; பக்கபலம்; உற்ற துணை.

    ‘எல்லா வகையிலும் அவன் மனைவி அவனுக்கு உறுதுணையாக நின்றாள்’
    ‘இந்த நிறுவனம் தொழில் தொடங்குவோருக்கு உறுதுணையாகத் திகழ்கிறது’