தமிழ் உறுப்பு யின் அர்த்தம்

உறுப்பு

பெயர்ச்சொல்

 • 1

  தனக்கென தனித்த செயல்பாட்டைக் கொண்டு உடலின் ஒரு பகுதியாக அமைந்திருப்பது; அங்கம்.

  ‘இதயம் என்பது நான்கு அறைகள் கொண்ட ஓர் உறுப்பு’
  ‘முதுகு உடலின் ஒரு பாகமே தவிர தனித்த உறுப்பு அல்ல’
  ‘உடற்பயிற்சி கைகால் போன்ற உறுப்புகளையும் தொடை, வயிறு போன்ற பாகங்களையும் வலுப்படுத்துகிறது’

 • 2

  ஓர் அமைப்பின் ஒரு பகுதி; அங்கம்.

  ‘இந்தியா கூட்டுச்சேரா நாடுகளின் அமைப்பில் ஓர் உறுப்பு நாடு’

 • 3

  அருகிவரும் வழக்கு (ஒன்றின்) கூறு.

  ‘யாப்பிலக்கணத்தின் ஓர் உறுப்பு அசை’

 • 4

  கணிதம்
  ஒரு சமன்பாட்டில் அல்லது ஒரு தொகுப்பில் உள்ள பகுதிகளில் ஒன்று.

  ‘6x²-7x+3= 13 என்ற சமன்பாட்டில் எத்தனை உறுப்புகள் உள்ளன’
  ‘(4,5,6,7,8) என்ற கணத்தில் ஐந்து உறுப்புகள் உள்ளன’