வினைச்சொல்
- 1
(திட நிலைக்கு வருதல் தொடர்பான வழக்கு)
- 1.1 (நீர், எண்ணெய், இரத்தம் முதலியன) கெட்டித் தன்மை அடைதல்; கெட்டியாதல் ‘குளிர் காலத்தில் தேங்காயெண்ணெய் உறைந்துவிடுவது வழக்கம்’‘விபத்து நடந்த இடத்தில் இரத்தம் திட்டுத்திட்டாக உறைந்திருந்தது’‘எரிமலைக் குழம்பு உறைந்து உண்டான பாறை’உரு வழக்கு ‘அவருடைய கண்களில் கோபச் சிவப்பு உறைந்திருக்கக் கண்டேன்’உரு வழக்கு ‘பயத்தில் அவன் ரத்தம் உறைந்துவிட்டது’
- 1.2 (பயத்தால் இயங்க முடியாமல்) விறைப்பாதல் ‘இரவில் திடீரென்று கூக்குரல் சத்தம் கேட்டதும் பயத்தால் உறைந்துபோனான்’
- 1.3 (பிரை ஊற்றிய பால் தயிராக) கெட்டிப்படுதல் ‘ஏன் தயிர் நன்றாக உறையவில்லை?’
- 1.1 (நீர், எண்ணெய், இரத்தம் முதலியன) கெட்டித் தன்மை அடைதல்; கெட்டியாதல்
- 2
(சில்லிடுதல் தொடர்பான வழக்கு)
- 2.1 (குளிரால்) விறைத்தல் ‘குளிரில் நிற்காதே, உறைந்துவிடுவாய்!’உரு வழக்கு ‘அவர் முகத்தில் கவலையும் பயமும் உறைந்துகிடந்தன’
- 2.1 (குளிரால்) விறைத்தல்
- 3
(ஓர் இடத்தில் இருத்தல் தொடர்பான வழக்கு)
- 3.1உயர் வழக்கு தங்குதல்; வாழ்தல் ‘இறைவன் வேறு எங்கும் இல்லை. உன் உள்ளேயே உறைகிறான்’
- 3.1உயர் வழக்கு தங்குதல்; வாழ்தல்
வினைச்சொல்
- 1
காரமாக இருத்தல்.
‘பச்சைமிளகாய் உறைக்காமல் இனிக்கவா செய்யும்?’ - 2
(சூடு, குளிர் முதலியவை அல்லது அடி, உதை, முதலியவை உடம்பில்) உணரப்படுதல்.
‘வெயில் சுள்ளென்று உறைத்தது’‘எத்தனை அடி வாங்கினான்? ஒரு அடியாவது உறைத்ததுபோல் தெரியவில்லை’ - 3
(கருத்து, பேச்சின் கடுமை முதலியவை) மனத்தில் உணரும்படி இருத்தல்; உறுத்துதல்.
‘எவ்வளவு சொன்னாலும் உனக்கு உறைக்காதா?’‘இந்தச் சின்ன விஷயம் எனக்கு உறைக்காமல் போய்விட்டதே!’‘அவர் கேலியாகச் சொன்னார் என்பது எனக்கு அப்போது உறைக்கவில்லை’
பெயர்ச்சொல்
- 1
- 1.1 (மண் சரிந்துவிடாமல் இருக்கக் கிணற்றின் உள்ளே ஒன்றின் மீது ஒன்றாக வைக்கும்) சிமிண்டு வளையம் ‘உறை இறக்கப்பட்ட கிணறு’
- 1.2வட்டார வழக்கு (தானியங்கள் சேமிக்கப் பயன்படும்) ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிப் பத்தாயமாகச் செய்யப்படும் செவ்வக வடிவ மர அமைப்பு
- 1.1 (மண் சரிந்துவிடாமல் இருக்கக் கிணற்றின் உள்ளே ஒன்றின் மீது ஒன்றாக வைக்கும்) சிமிண்டு வளையம்
- 2
- 2.1 (கடிதம் முதலியவற்றை வைப்பதற்குப் பயன்படுத்தும்) ஒரு பக்கம் திறக்கக்கூடிய (தாளால் ஆன) கூடு; (பொருளை மூடுவதற்குப் பயன்படுத்தும்) துணி அல்லது துணி போன்ற பொருளால் ஆன மூடி ‘பூர்த்திசெய்த விண்ணப்பத்தை உறையில் போட்டுப் பதிவு அஞ்சலில் அனுப்பு’‘தலையணை உறை தைக்கக் கொடுத்திருக்கிறேன்’‘கார் போன்ற வாகனங்களுக்கான உறைகள் இங்கு கிடைக்கும்’
- 2.2 (வாள், கத்தி முதலியன செருகிவைக்கும்) தோலால் ஆன மூடி ‘உறையோடு கூடிய கத்தி’
- 2.1 (கடிதம் முதலியவற்றை வைப்பதற்குப் பயன்படுத்தும்) ஒரு பக்கம் திறக்கக்கூடிய (தாளால் ஆன) கூடு; (பொருளை மூடுவதற்குப் பயன்படுத்தும்) துணி அல்லது துணி போன்ற பொருளால் ஆன மூடி