தமிழ் உலகம் யின் அர்த்தம்

உலகம்

பெயர்ச்சொல்

 • 1

  உயிரினங்கள் வாழும் பூமி.

  ‘உலகம் ஒரே நாளில் தோன்றிவிடவில்லை’

 • 2

  அனைத்து நாடுகளையும் பொதுவாகக் குறிக்கும் சொல்.

  ‘உலகம் எங்கும் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம்’
  ‘உலக சாதனை’
  ‘உலக அமைதிக்காக எல்லா நாடுகளும் பாடுபட வேண்டும்’

 • 3

  ஒரு குழுவோ தனிமனிதனோ கொள்கை அல்லது அக்கறைகள் அடிப்படையில் இயங்கும் தளம்.

  ‘தொழிலாளர் உலகம்’
  ‘விஞ்ஞான உலகம்’
  ‘இலக்கிய உலகம்’

 • 4

  பூமியில் வாழும் மனிதர்கள்.

  ‘காந்தி சுடப்பட்டபோது உலகமே கண்ணீர்விட்டது’

 • 5

  (புராணங்களின்படி) செய்த பாவபுண்ணியங்களுக்குத் தகுந்தாற்போல் இறப்புக்குப் பிறகு ஒருவர் செல்வதாக நம்பப்படும் இடம்.

  ‘வானுலகம்’
  ‘மேலுலகம்’
  ‘தேவருலகம்’

 • 6

  (மனித) வாழ்க்கையின் போக்கு; நடப்பு.

  ‘அவனுக்கு வயது என்னவோ இருபதாயிற்று. ஆனால் உலகம் தெரியாத அப்பாவி’

 • 7

  உயிரியல்
  (உயிரின வகைப்பாட்டில்) உயிரினங்களைத் தாவரங்கள், விலங்குகள் என்று இரண்டாகப் பிரிக்கும் பெரும் பிரிவு.