தமிழ் உலர்த்து யின் அர்த்தம்

உலர்த்து

வினைச்சொல்உலர்த்த, உலர்த்தி

  • 1

    (ஈரமாக இருப்பதைக் காற்றில், வெயிலில்) காய வைத்தல்.

    ‘துணி உலர்த்தும் கொடி’
    ‘வெயிலில் நின்றபடி தலை முடியை உலர்த்திக்கொண்டிருந்தாள்’
    ‘வேக வைத்த நெல்லை உலர்த்துவதற்காகக் களத்தில் கொட்டிப் பரப்பினார்கள்’