தமிழ் உலவு யின் அர்த்தம்

உலவு

வினைச்சொல்உலவ, உலவி

 • 1

  உயர் வழக்கு (மனிதர் அல்லாத பிற) நடமாடுதல்.

  ‘நரிகள் உலவும் தோப்பு’
  ‘இறந்துபோன எங்கள் தாத்தா வீட்டில் உலவுவதாக அம்மா நம்பினாள்’

 • 2

  உயர் வழக்கு (கருத்து, வதந்தி போன்றவை) பரவலாகப் பேசப்படுதல்; நிலவுதல்.

  ‘விலைவாசி உயர்வைப் பற்றி மக்களிடையே உலவும் கருத்து என்ன?’
  ‘அமைச்சர் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக வதந்தி உலவுகிறது’

 • 3

  சோதிடம்
  சஞ்சரித்தல்.

  ‘இதுவரை பாக்கிய ஸ்தானத்தில் உலவிய குருவும் சனியும் உங்கள் ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார்கள்’