உலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உலை1உலை2உலை3

உலை1

வினைச்சொல்உலைய, உலைந்து, உலைக்க, உலைத்து

 • 1

  (கட்டு) தளர்தல்; நெகிழ்ந்து பிரிதல்.

  ‘வாழை இலைக் கட்டு உலைந்துவிட்டது’
  ‘மடித்துவைத்திருந்த புடவை உலைந்துவிட்டது’

உலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உலை1உலை2உலை3

உலை2

வினைச்சொல்உலைய, உலைந்து, உலைக்க, உலைத்து

 • 1

  (கட்டு, வரிசை போன்றவற்றின் ஒழுங்கை) குலைத்தல்.

  ‘அடுக்கிவைத்திருந்த புத்தகங்களை உலைத்தது யார்?’

உலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உலை1உலை2உலை3

உலை3

பெயர்ச்சொல்

 • 1

  (சோறு சமைப்பதற்காக) நீருடன் அடுப்பில் வைக்கப்படும் பாத்திரம்/அந்தப் பாத்திரத்தில் உள்ள நீர்.

  ‘உலையில் அரிசி போட்டாயிற்றா?’
  ‘உலை கொதிக்கிறது’

 • 2

  (சோறு) சமைக்க உதவும் நெருப்பு.

  ‘சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டுவந்து உலை மூட்டினாள்’

 • 3

  உலோகங்களை மிக அதிக வெப்பத்தில் உருக்கும் சாதனம்.

  ‘ஆலையின் இயந்திரங்களும் உலைகளும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’