தமிழ் உளறு யின் அர்த்தம்

உளறு

வினைச்சொல்உளற, உளறி

 • 1

  (தூக்கத்தில், குடிபோதையில், பயத்தில்) குழறிப் பேசுதல்; தெளிவில்லாமல் பிதற்றுதல்.

  ‘நீ நேற்று தூக்கத்தில் உளறினாய்; குடிகாரன் உளறுவது மாதிரி’

 • 2

  (கேட்பவருடைய நோக்கில் மற்றொருவர்) அர்த்தம் இல்லாமல் அல்லது கட்டுப்பாடு இல்லாமல் பேசுதல்.

  ‘அவனுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் ஏதாவது உளறுவான்’

 • 3

  (ரகசியத்தை) வெளியே சொல்லிவிடுதல்.

  ‘நான் அவனிடம் சொன்ன ரகசியத்தை அவன் எல்லோரிடமும் உளறிவிட்டான்’