தமிழ் உள்ளடக்கு யின் அர்த்தம்

உள்ளடக்கு

வினைச்சொல்-அடக்க, -அடக்கி

 • 1

  (பல கூறுகளை) கொண்டிருத்தல்.

  ‘அடிப்படை வசதி என்பது குடிநீர், வடிகால், மின்சாரம் ஆகிய வசதிகளை உள்ளடக்கும்’
  ‘நாட்டியம் என்பது பல கூறுகளை உள்ளடக்கிய மிகப் பழமையான கலை’
  ‘தமிழின் இப்போதைய வரிவடிவம் வீரமாமுனிவரால் செய்யப்பட்ட பல மாற்றங்களை உள்ளடக்கியது’

 • 2

  (வரம்பு, வரையறை போன்றவற்றுக்கு ஒன்றை) உட்பட்டதாக ஆக்குதல்.

  ‘சொத்து என்னும் சொல் அசையும் சொத்து, அசையாச் சொத்து, பணம் ஆகியவற்றை உள்ளடக்கும்’