தமிழ் உள்ளடங்கு யின் அர்த்தம்

உள்ளடங்கு

வினைச்சொல்-அடங்க, -அடங்கி

 • 1

  (ஒன்றில் பல கூறுகள்) அமைந்திருத்தல்.

  ‘எங்கள் செயல்திட்டத்தில் நூல்களை வெளியிடுவதும் தரவுகளை ஆவணப்படுத்துவதும் உள்ளடங்கும்’
  ‘இந்தப் பட்டியலில் பல துறைகளைச் சார்ந்த வல்லுநர்களும் உள்ளடங்குவார்கள்’

 • 2

  (ஒன்றில் குறிப்பிட்ட தன்மை அல்லது பொருள்) பொதிந்திருத்தல்.

  ‘தலைப்புகளைக் கொண்டே கட்டுரைகளில் உள்ளடங்கிய செய்திகளை ஊகிக்கவைப்பது ஒரு திறமை’
  ‘முன்னோர் எழுதிய நூல்களின் உள்ளடங்கிய கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதில் தவறில்லை’

 • 3

  (குறிப்பிட்ட ஓர் இடத்திலிருந்து) சற்றுத் தள்ளி அமைதல்.

  ‘சாலையிலிருந்து உள்ளடங்கி அமைந்திருந்தது அந்த வீடு’
  ‘சற்று உள்ளடங்கி அழகாய்த் தெரிந்த கீழ் உதடு’

 • 4

  (குரல்) தாழ்தல்.

  ‘அவருடைய குரல் உள்ளடங்கி ஒலித்தது’