தமிழ் உள்ளாக்கு யின் அர்த்தம்

உள்ளாக்கு

வினைச்சொல்உள்ளாக்க, உள்ளாக்கி

  • 1

    (உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு) ஆளாக்குதல்.

    ‘மாணவன் கூறிய பதில் ஆசிரியரை வியப்புக்கு உள்ளாக்கியது’
    ‘சமீபத்தில் பெய்த பலத்த மழை விவசாயிகளைப் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது’
    ‘பண்டைய சமூக மதிப்பீடுகள் சில இன்று கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன’