தமிழ் உள்ளாகு யின் அர்த்தம்

உள்ளாகு

வினைச்சொல்உள்ளாக, உள்ளாகி

  • 1

    (ஓர் உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு) ஆளாகுதல்.

    ‘இளமையில் பல துன்பங்களுக்கு உள்ளாகி இன்று இந்த நிலைக்கு வந்திருப்பவர்’
    ‘ஓட்டுநரின் திறமையால் பேருந்து விபத்துக்கு உள்ளாகாமல் தப்பியது’