தமிழ் உள்ளிட்ட யின் அர்த்தம்

உள்ளிட்ட

இடைச்சொல்

  • 1

    ‘கூறப்பட்ட ஒருவரோ ஒன்றோ அல்லது மேற்பட்டவர்களோ மேற்பட்டவையோ சேர்ந்த’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘தலைமையாசிரியர் உள்ளிட்ட எல்லா ஆசிரியர்களும் கல்வி அமைச்சரைச் சந்தித்தனர்’
    ‘உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் இந்தக் கட்சிக்கு ஆதரவு உள்ளது’