தமிழ் உள்ளுக்குள் யின் அர்த்தம்

உள்ளுக்குள்

வினையடை

 • 1

  மனத்தின் அடித்தளத்தில்; மனத்திற்குள்.

  ‘அப்பாவிடம் பொய் சொல்ல நேரிட்டபோது உள்ளுக்குள் பயமாகத்தான் இருந்தது’
  ‘வருத்தப்படுவதாக வெளியில் காட்டிக்கொண்டாலும் அவருக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சிதான்’

 • 2

  உள்ளே.

  ‘மாம்பழம் உள்ளுக்குள் அழுகியிருந்தது’
  ‘மூச்சை மெதுவாக உள்ளுக்குள் இழுக்கவும்’