உள்ளே -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உள்ளே1உள்ளே2

உள்ளே1

வினையடை

 • 1

  ‘வெளியே’ என்று கூறுவதற்கு மாறான பக்கத்தில்; உட்பகுதியில்.

  ‘ஜன்னல் வழியாக உள்ளே குதித்தான்’
  ‘கதவை உள்ளே தாழிட்டுக்கொண்டாள்’

 • 2

  உடலின் பகுதியாக அமைந்து வெளியே தெரியாத உணவுக்குழல், வயிறு போன்றவற்றின் உட்பகுதியில்.

  ‘பீடியைப் பற்றவைத்துப் புகையை உள்ளே இழுத்தான்’
  ‘ஒருவாய் சோறு உள்ளே போனதும்தான் தெம்பு வந்தது’

 • 3

  பேச்சு வழக்கு சிறையில்.

  ‘அந்த ரௌடி உள்ளே இருந்துவிட்டு நேற்றுதான் விடுதலையாகி வந்தான்’
  ‘‘அதிகம் பேசினால் உள்ளே தூக்கிப்போட்டுவிடுவேன்’ என்று காவல்துறை அதிகாரி என்னை மிரட்டினார்’

உள்ளே -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உள்ளே1உள்ளே2

உள்ளே2

இடைச்சொல்