தமிழ் உழப்பு யின் அர்த்தம்

உழப்பு

வினைச்சொல்உழப்ப, உழப்பி

 • 1

  நேரடியாகப் பதில் சொல்லாமல் அல்லது உரிய வேலையைச் செய்யாமல் குழப்புதல்.

  ‘கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் உழப்புகிறான்’
  ‘சொன்ன வேலையைச் செய்யாமல் என்ன உழப்புகிறாய்?’

 • 2

  (வேண்டாததையெல்லாம் நினைத்து மனத்தை) குழப்புதல்.

  ‘நாளை கடிதம் வந்தால் எல்லாம் தெரிந்துவிடும். நீ மனத்தை உழப்பிக்கொள்ளாதே!’

 • 3

  வட்டார வழக்கு (பொருள்களை) கலைத்தல்; தாறுமாறாக்குதல்; உலைத்தல்.

  ‘அம்மா இல்லாத நேரத்தில் குழந்தை சாமான்களையெல்லாம் உழப்பிவிட்டது’

 • 4

  வட்டார வழக்கு கலக்குதல்.

  ‘ஏரியில் அங்கங்கே தேங்கி நின்ற நீரை உழப்பி மீன்பிடித்தார்கள்’