தமிழ் உழல் யின் அர்த்தம்

உழல்

வினைச்சொல்உழல, உழன்று

 • 1

  (வறுமை, நோய், வேலை முதலியவற்றில் அமிழ்ந்து) திணறுதல்; (நீண்ட காலமாக) அவதிப்படுதல்.

  ‘வறுமையில் உழன்ற காலத்திலும் புத்தகங்கள் வாங்காமல் அவர் இருந்ததில்லை’
  ‘வயதான காலத்தில் நோயில் உழலாமல் இருக்க வேண்டும்’

 • 2

  (ஓர் இடத்தை அல்லது ஒன்றை) சுற்றிச்சுற்றி அல்லது வளையவளைய வருதல்.

  ‘ஓய்வே இல்லாமல் அடுக்களையிலேயே உழன்றுகொண்டிருக்கிறாயே!’
  உரு வழக்கு ‘மனம் நினைவுகளில் உழன்றது’