உழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உழை1உழை2

உழை1

வினைச்சொல்உழைக்க, உழைத்து

 • 1

  கடினமாக வேலைசெய்தல்.

  ‘உழைக்காமல் யாரும் வெற்றி காண முடியாது’
  ‘உழைக்கும் மக்களின் நலனைக் காப்பது அரசின் கடமை’
  ‘மாணவிகள் இருவரும் தங்கள் நடனத்தில் நன்கு உழைத்து அக்கறையுடன் ஆடினார்கள்’

 • 2

  நீண்ட நாள் பயன்படுதல்.

  ‘இந்தத் துணி நன்றாக உழைக்கும்’

உழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உழை1உழை2

உழை2

பெயர்ச்சொல்

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  (தமிழிசையில்) ஏழு ஸ்வரங்களில் நான்காவது ஸ்வரமான ‘ம’வைக் குறிப்பது; மத்யமம்.