தமிழ் உழைப்பு யின் அர்த்தம்

உழைப்பு

பெயர்ச்சொல்

 • 1

  கடுமையான வேலை அல்லது பணி.

  ‘உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை’
  ‘மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு இவ்வளவு உழைப்பா?’

 • 2

  கடும் முயற்சி.

  ‘அவருடைய உழைப்பால்தான் இந்த ஊரில் தொழிற்சாலை ஏற்பட்டது’
  ‘இந்த நாவலில் ஆசிரியரின் உழைப்பு நன்றாகத் தெரிகிறது’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு வருமானம்.

  ‘அவன் ஒரு உழைப்பும் இல்லாமல் கஷ்டப்படுகிறான்’