தமிழ் உஷ்ணம் யின் அர்த்தம்

உஷ்ணம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவருடைய உடலின் அல்லது நெருப்பு, சீதோஷ்ணம் போன்றவற்றின்) வெப்பம்.

  ‘உடம்பு உஷ்ணமாக இருந்தால் கண் எரியும்’
  ‘சமவெளிப் பிரதேசங்களில் உஷ்ணம் அதிகம்’

 • 2

  (கோபத்தால் ஏற்படும்) சூடு.

  ‘‘என்ன தைரியம் இருந்தால் இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டு இல்லை என்பாய்’ என்று அப்பா உஷ்ணத்துடன் கேட்டார்’

 • 3

  சித்த வைத்தியம்
  உடம்பில் மட்டுமின்றி, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகளாலும் உணரப்படும், (மிளகாய், பப்பாளிக்காய் போன்ற) உணவுப்பொருள்களாலோ மருந்துகளாலோ ஏற்படும் வெப்பம்; சூடு.