தமிழ் உஷார் யின் அர்த்தம்
உஷார்
பெயர்ச்சொல்
- 1
(செயலில் காட்டும்) விழிப்புணர்வு; கவனம்.
‘கள்ள நோட்டை மாற்ற வந்தவர் வங்கி ஊழியரின் உஷாரினால் பிடிபட்டார்’‘அவன் கையில் கத்தி இருந்ததை உஷாராகவே தள்ளி நின்று கவனித்தேன்’‘கள்ளத் தோணியை எதிர்பார்த்துக் காவல்துறையினர் கடற்கரையில் உஷாராக இருந்தனர்’ - 2
(எந்த நிலைக்கும்) தயாராக இருப்பது; எச்சரிக்கை.