தமிழ் ஊக்கத் தொகை யின் அர்த்தம்

ஊக்கத் தொகை

பெயர்ச்சொல்

  • 1

    (செய்து முடித்த அல்லது செய்துவரும் செயல், பணி, சேவை போன்றவற்றுக்கு) ஊக்கம் தரும் வகையில் அளிக்கப்படும் தொகை.

    ‘காவிரிப் பகுதி விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் விலைக்கும் கூடுதலாக ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது’
    ‘புயல் பாதித்த பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றிய அரசுப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது’
    ‘பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதலிடம் பெறுபவர்களுக்குத் தலா 2000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று பிரபலத் தமிழ்ப் பத்திரிகை அறிவித்துள்ளது’