தமிழ் ஊக்குவி யின் அர்த்தம்

ஊக்குவி

வினைச்சொல்ஊக்குவிக்க, ஊக்குவித்து

  • 1

    (ஒரு வேலையைத் தொடங்குமாறு அல்லது செய்யும் வேலையைத் தொடரும் வகையில்) உற்சாகப்படுத்துதல்.

    ‘சிறுதொழில் துவங்குவதற்கு அரசு பல சலுகைகள் அளித்து ஊக்குவிக்கிறது’
    ‘என் முதல் புத்தகத்துக்குக் கிடைத்த பரிசுதான் என்னைத் தொடர்ந்து எழுதுமாறு ஊக்குவித்தது’