தமிழ் ஊக்கம் யின் அர்த்தம்

ஊக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒரு செயலைச் செய்வதற்குப் பிறர் தரும்) உற்சாகமான தூண்டுதல்; ஆதரவு.

  ‘குடும்பநலத் திட்டத்தை நிறைவேற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஊக்கம் தருவதற்காகப் பல சலுகைகள் அளிக்கப்படும்’
  ‘நண்பர்கள் தந்த ஊக்கம்தான் என்னை எழுதத் தூண்டியது’
  ‘தொழில் வளர்ச்சிக்கு அதிக ஊக்கம் தர வேண்டும்’

 • 2

  உந்துதல்.

  ‘தேர்வில் இந்த முறை வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று ஊக்கமாகப் படித்துவருகிறான்’
  ‘அவர் ஊக்கத்தோடு உழைக்கும் விவசாயி’