தமிழ் ஊசலாடு யின் அர்த்தம்

ஊசலாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

 • 1

  முன்னும் பின்னுமாக அசைதல்.

  ‘காற்றில் பூங்கொத்துகள் ஊசலாடின’
  ‘பள்ளிக்கூடம் விட்டதும் பையன்கள் தோளில் பை ஊசலாட ஓடிவந்தார்கள்’

 • 2

  (இரு நிலைகளுக்கு இடையே) முடிவெடுக்க முடியாமல் தடுமாறுதல்; அலைபாய்தல்.

  ‘முதல்முறை லஞ்சம் வாங்குபவன் அச்சத்துக்கும் ஆசைக்கும் இடையே ஊசலாடுகிறான்’
  ‘நம்பிக்கையிலும் அவநம்பிக்கையிலுமாக மனம் ஊசலாடியது’

 • 3

  (உயிர்) பிரியும் நிலையில் இருத்தல்; பிழைத்தலுக்கும் சாதலுக்கும் இடையே இருத்தல்.

  ‘விபத்தில் அடிபட்டவரின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது’

 • 4

  (மனத்தில் சந்தேகம் முதலியவை) மாறிமாறித் தோன்றவும் மறையவும் செய்தல்.

  ‘குற்ற உணர்ச்சி மனத்தில் ஒரு கணம் ஊசலாடி மறைந்தது’