தமிழ் ஊசி யின் அர்த்தம்

ஊசி

பெயர்ச்சொல்

 • 1

  நூல் கோத்துத் தைக்கப் பயன்படும் முள்போல் கூரிய முனையும் சிறு துளையும் உடைய மெல்லிய, சிறிய கம்பி.

  ‘ஊசியின் முனை உடைந்துவிட்டது’

 • 2

  உடம்பில் குத்தி மருந்து செலுத்தப் பயன்படும் கருவி.

  ‘கொதிக்கும் நீரிலிருந்து மருத்துவர் ஊசியை எடுத்தார்’

 • 3

  ஊசியின் மூலம் செலுத்தப்படும் மருந்து.

  ‘இந்த மருந்துச் சீட்டில் எழுதியிருக்கும் ஊசியை வாரத்துக்கு ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும்’