தமிழ் ஊட்டம் யின் அர்த்தம்

ஊட்டம்

பெயர்ச்சொல்-ஆன, -ஆக

 • 1

  உடல் வளர்ச்சிக்கு வேண்டிய சத்து.

  ‘குழந்தைகளுக்குத் தினமும் ஊட்டம் நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும்’
  ‘கருத்தரித்திருக்கும் பெண்களுக்கு ஊட்டமான உணவு அவசியம்’

 • 2

  (சத்துள்ள உணவு உண்பதால் ஏற்படும்) செழுமை.

  ‘உடல் ஊட்டத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும்’
  ‘உடம்பில் ஊட்டத்தின் மெருகு தெரிந்தது’

 • 3

  (பயிரின்) வளம்; செழிப்பு.

  ‘பயிர் ஊட்டமாக வளர்ந்திருக்கிறது’
  உரு வழக்கு ‘கொள்கைகளில் ஒற்றுமை உறவுகளுக்கு ஊட்டம் தருகின்றன’