தமிழ் ஊட்டு யின் அர்த்தம்

ஊட்டு

வினைச்சொல்ஊட்ட, ஊட்டி

 • 1

  (உணவைக் கையால் அல்லது கரண்டியால் எடுத்து ஒருவர்) வாயில் கொடுத்தல்/(குழந்தைக்குத் தாய்) தாய்ப்பால் கொடுத்தல்.

  ‘விளையாட்டுக்காட்டிக்கொண்டே சோறு ஊட்டினால் குழந்தை நிறையச் சாப்பிடுகிறது’
  ‘நோயாளிக்குக் கரண்டியால் ஊட்டிவிடு’
  ‘குழந்தைக்குப் பாலூட்டும் தாயின் புகைப்படம் முதல் பரிசு பெற்றது’

 • 2

  (நம்பிக்கை, மகிழ்ச்சி, பயம் முதலியவற்றை ஒருவர் மனத்தில்) ஏற்படுத்துதல்; தோற்றுவித்தல்.

  ‘ஒரே சமயத்தில் மகிழ்ச்சியும் திகிலும் ஊட்டும் திரைப்படம் இது’

 • 3

  (கல்வி) கற்பித்தல்.

  ‘அறிவூட்டி, கல்வியில் ஆர்வத்தையும் ஊட்டிய ஆசிரியர் இவர்’

 • 4

  உயர் வழக்கு (கண்ணுக்கு மை) தீட்டுதல்.

  ‘மையூட்டிய விழிகள்’