தமிழ் ஊடாடு யின் அர்த்தம்

ஊடாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு நெருங்கி உறவாடுதல்.

  ‘பிறமொழிக்காரர்களுடன் ஊடாடும்போது அவர்களுடைய பண்பாடும் மொழியும் நம்மிடம் ஒட்டிக்கொள்கின்றன’

 • 2

  உயர் வழக்கு ஊடுருவுதல்; பரவியிருத்தல்.

  ‘சுய அனுபவம் படைப்பில் ஊடாடி நிற்கும்போது நம்பகத்தன்மை அதிகரிக்கிறது’
  ‘சமுதாயத்தின் பல அங்கங்களிலும் போலித்தனம் ஊடாடுவதைத் தெளிவாக இந்தக் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது’
  ‘பாரதியின் வரிகளுக்கிடையே ஊடாடும் உள் அர்த்தம் இதுதான்’