தமிழ் ஊடுருவு யின் அர்த்தம்

ஊடுருவு

வினைச்சொல்ஊடுருவ, ஊடுருவி

 • 1

  ஒரு பரப்பின் வழியே உட்செல்லுதல்; துளைத்துக்கொண்டுபோதல்.

  ‘வேர்கள் நிலத்தை ஊடுருவிச் சென்றிருக்கின்றன’
  ‘துப்பாக்கிக் குண்டு அவனுடைய கழுத்தை ஊடுருவிற்று’
  ‘இந்த சோப்பு சருமத் துவாரங்களில் மறைந்திருக்கும் அழுக்கையும் கிருமிகளையும் ஊடுருவிச் சுத்தம் செய்கிறது’
  உரு வழக்கு ‘நேற்றைய ஹாக்கி போட்டியில் தன்ராஜ் பிள்ளை, ஜுக்ராஜ் சிங் ஆகியோர் எதிரணியின் அரணுக்குள் அடிக்கடி ஊடுருவித் தாக்குதல் ஆட்டம் தொடுத்தனர்’
  உரு வழக்கு ‘அவருடைய பார்வை அவனை ஊடுருவிற்று’
  உரு வழக்கு ‘உலகின் எல்லா நாடுகளிலும் அரசியலில் ஊழல் ஊடுருவியிருக்கிறது’

 • 2

  (ஒலி, ஒளி, மின்சாரம் முதலியன) உட்புகுதல்/(நீர்) உட்புகுந்து பரவுதல்.

  ‘கூரையில் பதித்திருந்த கண்ணாடி ஓடு வழியாகச் சூரிய ஒளி ஊடுருவிப் பாய்ந்தது’
  ‘உடம்பில் மின்சாரம் ஊடுருவியதுபோல் ஒரு உணர்வு’
  ‘களிமண் நிலத்தில் நீர் எளிதாக ஊடுருவாது’

 • 3

  (நாட்டின் எல்லைக்குள், ஒரு அமைப்புக்குள் ஒருவர்) கேடு விளைவிக்கும் நோக்கத்தோடு அனுமதி இல்லாமல் நுழைதல்.

  ‘ராஜஸ்தான் எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்’

 • 4

  (மொழி, இலக்கியம், கலை முதலியவற்றில் பிறருடைய அல்லது பிறவற்றின் கொள்கை, கருத்து முதலியன) பரவிக் காணப்படுதல்; விரவி இருத்தல்.

  ‘அவருடைய கதைகளில் உளவியல் கருத்துகள் ஊடுருவியிருப்பதைக் காணலாம்’
  ‘எல்லாக் காலங்களிலும் சமூகத்தில் பிற பண்பாட்டு அம்சங்கள் ஊடுருவியிருக்கின்றன’

 • 5

  (அடர்த்தியாக இருப்பதன் அல்லது மூடியிருப்பதன் வழியே) உட்புகுந்து கடந்து செல்லுதல்.

  ‘மூடுபனியில் ஊடுருவிச் செல்வதற்கு ஏற்ற விளக்குகள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன’
  ‘கூட்டத்தை ஊடுருவிச் செல்வது கடினமாக இருந்தது’