தமிழ் ஊடே யின் அர்த்தம்

ஊடே

இடைச்சொல்

  • 1

    (ஐந்தாம் வேற்றுமை உருபுக்குப் பின்) ‘வழியே’, ‘இடையில்’ என்ற பொருளில் பயன்படும் இடைச்சொல்.

    ‘கிளைகளினூடே சூரிய ஒளி பாய்ந்தது’
    ‘மரங்களினூடே வீடு அரைகுறையாகத் தெரிந்தது’
    ‘சாதாரண வாக்கியங்களினூடே அசாதாரணக் கருத்துகளைச் சொல்வதில் அவர் சிறந்த எழுத்தாளர்’