தமிழ் ஊதாரி யின் அர்த்தம்

ஊதாரி

பெயர்ச்சொல்

  • 1

    தன்னுடைய பொறுப்பை உணராமல் பணத்தையோ காலத்தையோ வீணாகச் செலவிடுபவர்.

    ‘தன் குடும்பச் சொத்தைச் சூதாடியே அழித்த ஊதாரி’

  • 2

    (பெயரடையாக) (செலவைக் குறித்து வரும்போது) அவசியம் இல்லாதது; வீணானது.

    ‘‘உன் ஊதாரிச் செலவுகளை நிறுத்தினால் ஒழிய சேமிக்க முடியாது’ என்று என் நண்பன் சொன்னான்’