தமிழ் ஊதாரித்தனம் யின் அர்த்தம்

ஊதாரித்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பணத்தைத் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாகச் செலவு செய்யும் தன்மை.

    ‘கையில் இருந்த பணத்தையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவு செய்துவிட்டு இப்போது எல்லாரிடமும் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறான்’
    ‘உன்னுடைய ஊதாரித்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா?’