ஊது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஊது1ஊது2

ஊது1

வினைச்சொல்ஊத, ஊதி

 • 1

  வாயைக் குவித்துக் காற்றை வெளிப்படுத்துதல்.

  ‘விளக்கை ஊதி அணைத்தான்’
  ‘புத்தகத்தின் மேல் இருக்கும் தூசியைத் துடை, ஊதாதே’
  ‘கரி அடுப்பை ஊதிஊதி வாய் வலிக்கிறது’

 • 2

  (காற்றை ஒன்றினுள்) செலுத்துதல்; நிரப்புதல்.

  ‘பலூனுக்குக் காற்று ஊதிக்கொடு!’

 • 3

  (உடல் அல்லது உடல் உறுப்பு) பெருத்தல்.

  ‘இரண்டு குழந்தை பிறந்தவுடன் அவள் ஊதிப்போய்விட்டாள்’
  ‘அவர் முகம் ஊதிப்போயிருந்தது’
  ‘அடையாளம் தெரியாமல் பிணம் ஊதிப்போயிருந்தது’

 • 4

  ஒலி எழுப்புதல்.

  ‘ரயில் ஒரு முறை ஊதிவிட்டுப் புறப்பட்டது’
  ‘பஞ்சாலையில் சங்கு ஊதும் சத்தம் கேட்கிறது’

 • 5

  (காற்றிசைக் கருவிகளை) வாசித்தல்.

  ‘நாட்டியத்தில் குழல் ஊதுவதுபோல் அபிநயித்தாள்’
  ‘ஒத்து ஊத ஒரு பையன் வேண்டும்’

 • 6

  அருகிவரும் வழக்கு புகைத்தல்.

  ‘தனிமையில் அமர்ந்து பீடி ஊதிக்கொண்டிருந்தான்’

ஊது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஊது1ஊது2

ஊது2

வினைச்சொல்ஊத, ஊதி

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (ஒருவரைப் பற்றி மற்றவரிடம்) ரகசியமாகக் குறைகூறுதல்; வத்திவைத்தல்.

  ‘என்னைப் பற்றி யாரோ அவரிடம் ஊதியிருக்க வேண்டும். அதனால்தான் அவர் மாறிவிட்டார்’