தமிழ் ஊர்வலம் யின் அர்த்தம்

ஊர்வலம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு நோக்கத்துக்காகத் தெருவில் அணிஅணியாகச் செல்லுதல்.

  ‘விலைவாசி உயர்வைக் கண்டித்துப் பொதுமக்கள் ஊர்வலம் நடத்தினர்’

 • 2

  (விழாவில் அல்லது கொண்டாட்டத்தில்) வீதிவலம் வருதல்.

  ‘வெற்றி ஊர்வலம்’
  ‘யானைமீது அரசர் ஊர்வலம்’