தமிழ் ஊற்றுக்கண் யின் அர்த்தம்

ஊற்றுக்கண்

பெயர்ச்சொல்

 • 1

  (கிணறு முதலியவற்றின் அடியில் அல்லது ஓரங்களிலிருந்து) நீர் சுரந்து வரும் வழி.

  ‘ஊற்றுக்கண் அடைபட்டுவிட்டதால் கிணற்றில் நீர் ஊறவில்லை’

 • 2

  ஒன்று உருவாவதற்கு அல்லது தோன்றுவதற்கு ஆதாரமாக அமைவது.

  ‘அதிகாரத்தைச் சீரழிவின் ஊற்றுக்கண்ணாக அந்த அறிஞர் காண்கிறார்’
  ‘ஊழலின் ஊற்றுக்கண்ணே அரசியல்தான் என்று அவர் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது’