ஊறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஊறு1ஊறு2

ஊறு1

வினைச்சொல்ஊற, ஊறி

 • 1

  (நீர், எச்சில் முதலியன) வெளிவருதல்; சுரத்தல்.

  ‘கிணற்றில் நீர் ஊறட்டும், பிறகு தண்ணீர் இறைக்கலாம்’
  ‘மசாலாவின் வாசனையால் வாயில் நீர் ஊறுகிறது’

 • 2

  (அரிசி, பருப்பு முதலிய பொருள்கள்) நனைந்து மென்மையாதல்.

  ‘அரிசி ஊறிவிட்டதா என்று பார்’
  ‘இஞ்சியைத் தேனில் ஊற வைத்துச் சாப்பிட வேண்டும்’

 • 3

  (அழுக்குப் போவதற்காகத் துணி) நீரில் நனைதல்.

  ‘குளிக்கிற வாளியில் சட்டையை ஊற வைத்திருப்பது யார்?’

 • 4

  காகிதம், துணி முதலியவற்றில் (நீர், மை போன்றவை) பரவுதல்.

  ‘இந்தக் காகிதத்தில் மை ஊறுகிறது’

 • 5

  (குறிப்பிட்ட உணர்வு, பழக்கவழக்கம் போன்றவற்றில் மனம்) தோய்தல்.

  ‘பழைய பழக்கவழக்கங்களில் ஊறிவிட்ட எங்களால் புதியனவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’
  ‘தான் சொல்வது எப்போதும் சரியாகவே இருக்கும் என்கிற எண்ணம் அவர் உள்ளத்தில் ஊறிப்போயிருக்கிறது’
  ‘தேசப்பற்று என்பது அவர் இரத்தத்தில் ஊறிப்போய்விட்ட ஒன்று’

ஊறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஊறு1ஊறு2

ஊறு2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு தீங்கு.

  ‘போதைப்பொருள்கள் உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடியவை ஆகும்’
  ‘நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு ஏற்படாமல் காக்க வேண்டிய பொறுப்பு மக்களுடையது’