தமிழ் ஊழியம் யின் அர்த்தம்

ஊழியம்

பெயர்ச்சொல்

 • 1

  (கடவுள், அரசன் முதலியோருக்குச் செய்யப்படும்) தொண்டு அல்லது சேவை.

  ‘கோயிலுக்கு ஊழியம் செய்த புண்ணியம் உனக்கு உண்டு’
  ‘அரண்மனை ஊழியம் செய்து தலை நரைத்தவர்!’

 • 2

  கிறித்தவ வழக்கு
  கிறித்தவ மதத்தைப் பரப்பும் தொண்டு.

  ‘நான் தேவனுக்கு ஊழியம் செய்கிறேன்’

 • 3

  அருகிவரும் வழக்கு (அரசுத் துறை முதலியவற்றில்) பணி; வேலை.

  ‘அரசுத் துறையில் ஊழியம் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் உண்டு’