தமிழ் எக்களி யின் அர்த்தம்

எக்களி

வினைச்சொல்எக்களிக்க, எக்களித்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (சாதனையின் காரணமாக) இறுமாப்புடன் மகிழ்ச்சியை வெளிக்காட்டுதல்.

  ‘இந்தப் போட்டியில் வென்றுவிட்டதற்காக எக்களிக்காதே; அடுத்த போட்டியில் உன்னைக் கவனித்துக்கொள்கிறேன்!’
  ‘அவனை அடித்துக் கீழே சாய்த்துவிட்டு எக்களித்தான் அந்த முரடன்’

 • 2

  உயர் வழக்கு குதூகலம் அடைதல்.

  ‘அவர் மனம் விடுதலையில் எக்களித்தது’
  ‘நாளை விடுமுறை என்று ஆசிரியர் சொன்னதும் மாணவர்கள் மகிழ்ச்சியில் எக்களித்தனர்’