தமிழ் எக்கு யின் அர்த்தம்

எக்கு

வினைச்சொல்எக்க, எக்கி

 • 1

  (இறுக்கமான ஆடையை அணிந்துகொள்ளவோ ஒரு செயலைச் செய்வதற்காகவோ வயிற்றை) உள்ளிழுத்தல்.

  ‘வயிற்றை எக்கியும்கூடப் பழைய கால்சட்டையைப் போடமுடியவில்லை’
  ‘இந்த யோகாசனத்தைச் செய்ய வயிற்றுத் தசையை உட்புறமாகக் குழித்து எக்க வேண்டும்’

 • 2

  (ஒன்றை எடுப்பதற்காக அல்லது ஒன்றைப் பார்ப்பதற்காக) பாதத்தின் முன்பகுதியை ஊன்றி உடலை உயர்த்துதல்; எம்புதல்.

  ‘நீ உயரமாக இருப்பதால் பரணில் இருக்கும் பெட்டியை எக்கி எடுத்துவிடலாம்’
  ‘எக்கிஎக்கிப் பார்த்துக் காலும் தலையும் வலிக்கிறது’