தமிழ் எகிறு யின் அர்த்தம்

எகிறு

வினைச்சொல்எகிற, எகிறி

 • 1

  (அதிர்வினால் ஒரு பொருள்) விசையுடன் துள்ளுதல்; ஒரு பொருள் விசையின் காரணமாக எறியப்படுதல்.

  ‘வேகமாக ஓடியபோது பேனா எகிறிக் கீழே விழுந்திருக்க வேண்டும்’
  ‘வண்டி திடீரென்று நின்றதும் பையில் இருந்த காய்கறிகள் எகிறிப்போய் விழுந்தன’
  ‘மட்டையாளரின் கையில் பட்டுப் பந்து எகிறியது’
  ‘‘அளவுக்கு அதிகமாகப் பேசினால் உன் பற்களெல்லாம் எகிறிவிடும்’ என்று மிரட்டினான்’

 • 2

  (குதித்தல் போன்ற வினையோடு வரும்போது) தாவுதல்.

  ‘ஒரு ஆள் சுலபமாக எகிறிக் குதிக்கும் அளவுக்குப் பெரிய ஜன்னல்’

 • 3

  (சண்டை போடும்போது பேச்சில் அல்லது செயலில்) அளவு மீறுதல்.

  ‘மரியாதையாகப் பேசு, ரொம்பவும் எகிறாதே!’

 • 4

  (வழக்கமான நிலையிலிருந்தோ அளவிலிருந்தோ ஒன்று) திடீரென்று அதிகமாக உயர்தல்.

  ‘படத் தயாரிப்பிற்கான செலவுகள் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டேயிருக்கின்றன’
  ‘பங்குச் சந்தையில் இன்று குறியீட்டெண் எகிறி விட்டது’