தமிழ் எங்கும் யின் அர்த்தம்

எங்கும்

வினையடை

  • 1

    (குறிப்பிடப்படும் இடத்தின்) எல்லாப் பகுதிகளிலும்; முழுவதும்.

    ‘எங்கள் தயாரிப்புகள் தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கும்’
    ‘வீடெங்கும் ஒரே தூசி’
    ‘சுதந்திர தின விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டது’