தமிழ் எச்சம் யின் அர்த்தம்

எச்சம்

பெயர்ச்சொல்

 • 1

  (பறவைகளின் அல்லது பல்லி முதலியவற்றின்) கழிவு.

  ‘மரத்தடியில் நின்றால் காக்கை எச்சம் தலையில் விழாமல் இருக்குமா?’
  ‘பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சத்திலிருந்து வைரஸ் பரவுகிறது’

 • 2

  (முன்பு இருந்ததை அடையாளம் காட்டும்படியான) மீதி; மிச்சம்; (அழிந்துபோனது போக) எஞ்சியிருப்பது.

  ‘கூட்டுக் குடும்ப முறை உடைந்துவிட்டது. அதன் எச்சங்களையே நாம் இன்று காண்கிறோம்’
  ‘எஜமான விசுவாசம் என்பது நிலப் பிரபுத்துவத்தின் எச்சமா?’
  ‘மழைக்காடுகளின் எச்சத்தைக் கேரளத்தில் காணலாம்’

 • 3

  (தானிய மணிகள் நீக்கப்பட்ட தாள் போன்ற) கழிவு.

  ‘பயிர் எச்சங்களை உரமாகப் பயன்படுத்தலாம்’

 • 4

  இலக்கணம்
  (வினைச்சொல்லின் வடிவங்களில்) முற்று வடிவம் அல்லாதது.

  ‘எச்சச் சொற்களைப் பயன்படுத்தி நீண்ட தொடரைத் தமிழில் எழுத முடியும்’