தமிழ் எச்சரி யின் அர்த்தம்

எச்சரி

வினைச்சொல்எச்சரிக்க, எச்சரித்து

 • 1

  (பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக) கவனமாக இருக்கும்படி கூறுதல்.

  ‘திருடர்கள் நடமாட்டம் இருப்பதால் இரவில் வெளியே போகவேண்டாம் என்று அவர் எச்சரித்தார்’
  ‘அணு ஆயுதங்களால் ஏற்படும் அழிவுபற்றி அவர் மக்களை எச்சரித்தார்’
  ‘சாலையில் அபாயகரமான வளைவு இருக்கிறது என்று எச்சரிக்கும் பலகை’

 • 2

  (கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் விதிகளுக்கு மாறாகவோ முறை தவறியோ நடந்துகொள்ளும் வீரரை நடுவர்) கண்டித்தல்.

  ‘பந்துவீசிவிட்டு ஆடுகளத்தின் மீது ஓடிய வீரரை நடுவர் எச்சரித்தார்’
  ‘கால்பந்தாட்டத்தில் எதிரணி வீரரை இடித்துக் கீழே தள்ளிய வீரருக்கு மஞ்சள் அட்டை காண்பித்து நடுவர் எச்சரித்தார்’