தமிழ் எச்சரிக்கை யின் அர்த்தம்

எச்சரிக்கை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதற்கான) கவனம்.

  ‘அவர் இருதய நோயாளி; எப்போதும் எச்சரிக்கையாக இருப்பார்’
  ‘நாயை மிதித்துவிடாமல் எச்சரிக்கையுடன் விலகி நடந்தார்’

 • 2

  (கவனம் தேவை என்னும்) முன்னறிவிப்பு; ஜாக்கிரதை.

  ‘சாலையில் ‘எச்சரிக்கை, ஆட்கள் வேலை செய்கிறார்கள்’ என்னும் பலகை வைக்கப்பட்டிருந்தது’

 • 3

  ஒருவர் முறையாக நடந்துகொள்ளவில்லை என்றால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என்று பயமுறுத்துதல்.

  ‘தலைமை ஆசிரியரின் கடைசி எச்சரிக்கை சற்றுக் கடுமையாகவே இருந்தது’