தமிழ் எஜமான் யின் அர்த்தம்

எஜமான்

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு தங்கள் முதலாளியைக் குறிப்பிடுவதற்கு விவசாயத் தொழிலாளர்கள், வேலையாட்கள் போன்றோர் பயன்படுத்தும் சொல்.

    ‘இவர் என் எஜமானுக்கு மிகவும் வேண்டியவர்’

  • 2

    அருகிவரும் வழக்கு, பேச்சு வழக்கு அந்தஸ்து, செல்வம் முதலியவற்றில் மேல்நிலையில் இருப்பவரை ஒருவர் மரியாதையுடன் அழைக்கப் பயன்படுத்தும் சொல்.

    ‘காரை நிறுத்திவிட்டு அவர் இறங்கியதும் அங்கிருந்த பிச்சைக்காரர்கள் எல்லாம் ‘எஜமான், எஜமான்’ என்று கையை நீட்டியபடி அவரிடம் ஓடினார்கள்’