தமிழ் எட்டிப்பார் யின் அர்த்தம்

எட்டிப்பார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

 • 1

  (பல்வேறு அலுவல்களுக்கு இடையில் அல்லது அரிதாக ஒருவரை) பார்க்கச் செல்லுதல் அல்லது வருதல்.

  ‘இவ்வளவு தூரம் வந்துவிட்டோம்; அவரையும் எட்டிப்பார்த்துவிடுவோமே!’
  ‘அடுத்த மாதமாவது ஊருக்குப் போய் அம்மாவை எட்டிப் பார்த்துவிட்டு வர வேண்டும்’

 • 2

  (பெரும்பாலும் எதிர்மறை வினை வடிவங்களில்) (ஓர் இடத்துக்கு) மீண்டும் வருதல்.

  ‘இனிமேல் இந்தப் பக்கம் எட்டிப்பார்க்காதே!’
  ‘நகரத்துக்குப் போய்விட்டவர்கள் கிராமத்தை எட்டிப்பார்ப்பதில்லை’

 • 3

  (பெரும்பாலும் எதிர்மறைத் தொடர்களில்) (குறிப்பிட்ட நோக்கத்திற்காக) ஒரு இடத்துக்குச் செல்லுதல்.

  ‘இவ்வளவு அழகாகப் பேசுகிற இவர் பள்ளிக்கூடத்தை எட்டிப்பார்த்ததில்லை’
  ‘நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நம்மைப் போன்றவர்கள் ஐந்து நட்சத்திர ஓட்டல்களை எட்டிப் பார்க்க முடியாது’

 • 4

  (கோபம், அமைதி, பிரச்சினை முதலியவை) தலைகாட்டுதல்.

  ‘அவருக்குக் கோபம் எட்டிப்பார்த்தது’
  ‘மனத்தில் கொஞ்சம் நிம்மதி எட்டிப்பார்த்தது’
  ‘நீண்ட காலத்திற்குப் பின் நாட்டில் எட்டிப்பார்த்த அமைதியைக் குலைக்கும் வகையில் மறுபடியும் போரா?’