தமிழ் எடுத்தாள் யின் அர்த்தம்

எடுத்தாள்

வினைச்சொல்-ஆள, -ஆண்டு

  • 1

    (எழுத்தில்) கையாளுதல்; பயன்படுத்துதல்.

    ‘சில கிரேக்கக் கதாபாத்திரங்களை இந்த நாடகாசிரியர் நகைச்சுவைக்காக எடுத்தாண்டிருக்கிறார்’
    ‘இவர் தன் பேச்சில் உவமைகளைப் பொருத்தமாக எடுத்தாள்கிறார்’
    ‘இந்தக் கட்டுரையில் அவர் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை எடுத்தாண்டிருக்கும் விதம் விவாதத்திற்குரியது’