தமிழ் எடுத்து யின் அர்த்தம்

எடுத்து

வினையடை

  • 1

    (‘கூறுதல்’, ‘விளக்குதல்’ தொடர்பான வினைகளின் முன்) (கூறப்படும் செய்திக்கு) முக்கியத்துவம் தந்து; முதன்மைப்படுத்தி/(செய்தியை) அறிந்துகொள்ளும் வகையில்.

    ‘இதை அவன் மனத்தில் படும்படி நீ எடுத்துச் சொல்ல வேண்டும்’
    ‘மாநிலத்தின் அரசியல் நிலைமையை முதலமைச்சர் ஆளுநரிடம் எடுத்துக் கூறினார்’
    ‘செய்தியை அவர் எடுத்து உரைத்த விதமே தனி’