தமிழ் எடுத்துக்காட்டு யின் அர்த்தம்

எடுத்துக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

 • 1

  (ஒன்றின் அல்லது ஒருவரின் தன்மையை) வெளிப்படுத்துதல்.

  ‘இந்தச் சிறுகதையே அவர் சிறந்த எழுத்தாளர் என்பதை எடுத்துக்காட்டுகிறது’
  ‘அவனுடைய போக்கு அவன் பலவீனங்களை எடுத்துக்காட்டும்வண்ணம் இருக்கிறது’

 • 2

  சுட்டிக்காட்டுதல்.

  ‘ரசாயன உரங்களை அதிகமாகப் போடுவதால் ஏற்படும் விளைவுகளை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன’

தமிழ் எடுத்துக்காட்டு யின் அர்த்தம்

எடுத்துக்காட்டு

பெயர்ச்சொல்

 • 1

  உதாரணம்.

  ‘இந்த இலக்கண விதிக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு கிடைக்கவில்லையா?’

 • 2

  சான்று.

  ‘தன் கொள்கையை நிறுவ இவர் தரும் எடுத்துக்காட்டுகள் போதுமானவை அல்ல’